முஸ்லிம்களின் அடையாளங்களில் ஒன்று தன்னம்பிக்கை



முஸ்லிம்களின் அடையாளங்களில் ஒன்று தன்னம்பிக்கை
நேற்று பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வந்தன. இதனால் பல மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில் சந்தோஷம் அடைந்தாலும் சில மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சித்தார்கள் அதில் சிலர் மரணித்தும் போனார்கள் என்பது செய்தித்தாள் மூலமாக நாம் அறியவரும் செய்தி. தேர்வு முடிவுகள் வந்தாலே அடுத்த நாள் செய்தித்தாள்களில் இது போன்ற தற்கொலை சார்ந்த செய்திகள் வருவது வழக்கமாக மாறிவிட்டது.
ஆனால் இஸ்லாம் முதலில் தற்கொலைக்கு முதல் எதிரி. சொல்லால் மட்டும்  அல்ல அதற்குரிய தடுப்பு வழிகளையும் முன் எச்சரிக்கை வழிகளையும் சொல்லிகாட்டியிருக்கிறது. இது சார்ந்த விழிப்புணர்வுகளையும் தெளிவுகளையும் ஆலிம் சமுதாயம் நாம் மக்களுக்கு தர வேண்டும்.
முதலில் தற்கொலைக்கு முயற்சிப்பவர் மன ரீதியாக முதலில் பாதிக்கப்படுகிறார்கள். ஒன்று தான் விரும்பிய பொருள் அல்லது இலக்கு தனக்கு கிடைக்கவில்லை என்ற கவலையின் விளைவு அல்லது இனி தனக்கு இந்த உலகில் வாழ வாய்ப்பு இல்லை என்ற அவர்களின் கோழைத்தனமான எண்ணம்.
இந்த இரண்டையும் கலையத்தான் அல்லாஹ்வும் இரசூலும் நமக்கு இரண்டு சூத்திரங்களை சொல்லிக்கொடுக்கிறார்கள்.
1. உலகில் நடக்கும் அனைத்து காரியங்களும் அல்லாஹ்வின் அனுமதி இன்றி நடைபெறுவது கிடையாது. அவன் நடத்தும் திருவிளையாடல்களே அனைத்தும். என்ற எண்ணத்தை இஸ்லாம் நமக்கு ஆரம்ப பாடமாக ஈமானின் ஒரு அங்கமாக 'நன்மையும் , தீமையும் அவன் புறத்திலிருந்தே வருகின்றன'  நமக்கு சொல்லிக்காட்டப்படுகிறது. இந்த கொள்கையில் ஒருவன் உறுதியாக இருந்து விட்டால் எந்த தீமைகளும் சிறமங்களும் வந்தாலும் அவை அனைத்தும் 'அவன் செயல் எல்லாம் நன்மைக்கே' என்று கூறி தன்னை திடப்படுத்திக்கொள்வானே தவிர தன்னை ஒரு போதும் வாழ்கைக்கு தகுதியற்றவனாக நினைக்க மாட்டான்.
2. ஒரு பொருளை அதிகம் விரும்புவதும் ஒரு பொருளை அதிகம் வெறுப்பதும் தவறு. யாரையும் விரும்பவோ வெறுக்கவோ இஸ்லாம தடை சொல்லவில்லை. ஆனால் அதில் ஒரு எல்லை இருக்க வேண்டும். எல்லை மீறிய பிரியமும், அன்பும் அல்லது வெறுப்பும் ஒரு மனிதனை தன் நிலைகுழைய செய்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நபி ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள்.

1997 - حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا سُوَيْدُ بْنُ عَمْرٍو الكَلْبِيُّ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ أُرَاهُ رَفَعَهُ ـ قَالَ: «أَحْبِبْ حَبِيبَكَ هَوْنًا مَا عَسَى أَنْ يَكُونَ بَغِيضَكَ يَوْمًا مَا، وَأَبْغِضْ بَغِيضَكَ هَوْنًا مَا عَسَى أَنْ يَكُونَ حَبِيبَكَ يَوْمًا مَا»

;'உன் நண்பனை நடுத்தரமாக விரும்பு காரணம் ஒரு நாள் அவன் உனக்கு பிடிக்காதவனாக மாற வாய்ப்பு உண்டு. உன் எதிரியை நீ அளவோடு வெறு. காரணம் ஒரு நாள் அவன் உன் நண்பனாக மாற வாய்ப்பு உண்டு.'
ஆக எந்த நபரையும் பொருளையும் ஒரு அளவோடு தான் பிரியப்படவேண்டுமே தவிர அளவுக்கு மீறி பிரியப்பட்டால் அது நம் வாழ்கையின் சந்தோசத்தை சீர்குழைத்து விடும்.
ஒரு அரபு பழமொழி :

حب الشيئ يعمي و يصم

ஒரு பொருளின் பிரியம் நம்மை குருடனாக்கும் மேலும் செவிடனாக்கும்.
எந்த பொருளை வைத்து தற்கொலை செய்கிறானோ அதே பொருளைக்கொண்டு நரகத்தில் வேதனை செய்யப்படுவான்.
صحيح البخاري 296

1363 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ حَلَفَ بِمِلَّةٍ غَيْرِ الإِسْلاَمِ كَاذِبًا مُتَعَمِّدًا، فَهُوَ كَمَا قَالَ، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ عُذِّبَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ»

துன்பம் தீரும் என்று எண்ணி தற்கொலை செய்பவன் நரகில் நிரந்தரமான துன்பத்திற்கு ஆளாகி விடுவான்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ فِي نَارِ جَهَنَّمَ يَتَرَدَّى فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ تَحَسَّى سُمًّا فَقَتَلَ نَفْسَهُ فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَجَأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا

வீரமாகப் போராடி இஸ்லாமிய எதிரிகளை வென்றவர் கடைசியில் தற்கொலை செய்து கொண்டதால் நரகவாதி ஆனார்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ شَهِدْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لِرَجُلٍ مِمَّنْ يَدَّعِي الْإِسْلَامَ هَذَا مِنْ أَهْلِ النَّارِ فَلَمَّا حَضَرَ الْقِتَالُ قَاتَلَ الرَّجُلُ قِتَالًا شَدِيدًا فَأَصَابَتْهُ جِرَاحَةٌ فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ الَّذِي قُلْتَ لَهُ إِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ فَإِنَّهُ قَدْ قَاتَلَ الْيَوْمَ قِتَالًا شَدِيدًا وَقَدْ مَاتَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى النَّارِ قَالَ فَكَادَ بَعْضُ النَّاسِ أَنْ يَرْتَابَ فَبَيْنَمَا هُمْ عَلَى ذَلِكَ إِذْ قِيلَ إِنَّهُ لَمْ يَمُتْ وَلَكِنَّ بِهِ جِرَاحًا شَدِيدًا فَلَمَّا كَانَ مِنْ اللَّيْلِ لَمْ يَصْبِرْ عَلَى الْجِرَاحِ فَقَتَلَ نَفْسَهُ فَأُخْبِرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذَلِكَ فَقَالَ اللَّهُ أَكْبَرُ أَشْهَدُ أَنِّي عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ ثُمَّ أَمَرَ بِلَالًا فَنَادَى بِالنَّاسِ إِنَّهُ لَا يَدْخُلُ الْجَنَّةَ إِلَّا نَفْسٌ مُسْلِمَةٌ وَإِنَّ اللَّهَ لَيُؤَيِّدُ هَذَا الدِّينَ بِالرَّجُلِ الْفَاجِرِ(بخاري)

தனக்கு ஏற்பட்டு விட்ட துன்பத்திற்காக அல்லாஹ்விடம் எனக்கு மரணத்தைக் கொடு என்று கேட்பதும் தவறாகும்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَتَمَنَّيَنَّ أَحَدُكُمْ الْمَوْتَ مِنْ ضُرٍّ أَصَابَهُ فَإِنْ كَانَ لَا بُدَّ فَاعِلًا فَلْيَقُلْ اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتْ الْحَيَاةُ خَيْرًا لِي وَتَوَفَّنِي إِذَا كَانَتْ الْوَفَاةُ خَيْرًا لِي (بخا

0 comments: